பிரபல சிங்கள இயக்குனர் காலமானார்!

பிரபல சிங்கள இயக்குநர் சுமித்ரா பீரிஸ் இன்று (19) காலை காலமானார். இவர் சிங்கள சினிமாவின் தந்தையென வர்ணிக்கப்படும் ஒளிப்பதிவாளர், இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியாவார். உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.